கொரோனாவால் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! குடும்பத்திற்காக தெரு தெருவாக அலையும் காட்சி

Report Print Santhan in பொழுதுபோக்கு

இந்தியாவில் பிரபல திரைப்பட நடிகர் சோலாங்கி திவாகர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தெரு தெருவாக சென்று பழம் விற்கும் பரிதாப வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஆக்ராவை சேர்ந்தவர் Solanki Diwakar. கடந்த 1995-ஆம் ஆண்டு டெல்லிக்கு குடி பெயர்ந்த இவர் ட்ரீம் கேர்ள் (Dream Girl), சோஞ்சிரியா(Sonchiriya) போன்ற திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானார்.

அதன் பின் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், ஊரடங்கு காரணமகவும் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

இதனால் இவர் தற்போது பழங்களை விற்று சம்பாதிக்கும் பணியில் இறங்கியுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே Solanki Diwakar பழங்களை விற்று வந்ததால், தற்போது அதை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், படங்களில் நடிப்பதற்கு முன்பு, நான் வீட்டு உதவியாளராக பணியாற்றினேன். பின்னர் பழங்களை விற்பனை செய்தேன்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், எனது தேவைகளை கவனித்து கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வாடகை கொடுக்க வேண்டும், குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க பணம் தேவை என்பதால், நான் என்னுடைய பழைய வேலை, அதாவது பழங்களை விற்பனை செய்யும் தொழிலுக்கு திரும்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்