27 வயதில் பிரபல திரைப்பட நடிகர் திடீர் மரணம்! நண்பர் வேதனையுடன் வெளியிட்ட தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல பாலிவுட் நகைச்சுவரை நடிகர் தன்னுடைய 27 வயதில் பரிதாபமாக உயிரிழந்ததால், பாலிவுட் பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில், உவா, மிலன் டாக்கீஸ் சல்மான் கானுடன் ரெடி, பரினீதி சோப்ராவுடன் ஜபாரியா ஜோடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மோஹித்.

ராணி முகர்ஜி, சைப் அலி கான் நடிப்பில் உருவாகும் பண்டீ அவுர் பப்ளி 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜனவரி மாதம் முதல் அந்தப் படத்தில் நடித்து வந்தார்.

கடந்த 6 மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மோஹித் மேற்கொண்டிருந்தார்.

நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக அவரது திரையுலக நண்பர், இயக்குநர் ராஜ் சாண்டில்யா (ட்ரீம் கேர்ள் இயக்குநர்)கூறியுள்ளார்.

நோய் முற்றியதால், சனிக்கிழமை, மதுராவில் இருக்கும் அவரது இல்லத்தில் மோஹித் உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.

மோஹித்தின் மரணத்துக்கு பல பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடன் ஜபாரியா ஜோடி படத்தில் நடித்த நடிகை பரீனீதி சோப்ரா, தனது டுவிட்டர் பக்கத்தில், பணியாற்ற மிக இனிமையான மனிதர்களில் ஒருவர்.

மகிழ்ச்சியாக, எப்போதும் உற்சாகமாக, நேர்மறை சிந்தனையுடன் இருப்பவர். உங்களுக்கு என் அன்பு மோஹித். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பகிர்ந்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்