நடிகர் கமலுக்கும், தனக்கும் இடையே இருக்கும் உறவு என்ன? உண்மையை உடைத்த நடிகை பூஜா குமார்

Report Print Santhan in பொழுதுபோக்கு

நடிகர் கமலுக்கும், நடிகை பூஜாகுமாருக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து அவ்வப்போது ஏதேனும் ஒரு தகவல் வெளிவந்து கொண்டிருப்பதால், இது குறித்து பூஜா குமார் தற்போது பேசியுள்ளார்.

அமெரிக்காவில் வசித்து பூஜா குமார், கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற திரைப்படம் மூலம் நடிகரானவர்.

அவர் தமிழ் தவிர்த்து இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு பெரிய பிரேக்கிற்கு பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் படம் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் பூஜா குமார்.

அந்த படத்தில் அவரை பார்த்த தமிழ் ரசிகர்கள், அப்படியே இருக்காரே என்று வியந்தார்கள். இதையடுத்து கமல் நடித்த உத்தம வில்லன் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களிலும் பூஜா குமார் நடித்தார்.

இந்நிலையில் கமல் நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்திலும் பூஜா குமார் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.

விஸ்வரூபம் படத்தில் நடித்தபோதே கமலுக்கும், பூஜா குமாருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதனால் இது குறித்து எழும் தேவையில்லாத பேச்சுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பூஜாகுமார் அளித்துள்ள பேட்டியில், எனக்கு கமல் சார் மற்றும் அவர் குடும்பத்தாரை பல காலமாக தெரியும்.

நான் கமல் சாருடன் சேர்ந்து நடிக்கத் துவங்கியபோதே அவரின் குடும்பத்தாரை தெரியும். தயாரிப்பாளரான அவரின் அண்ணன், மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா உள்ளிட்ட அனைவரையும் நன்கு தெரியும்.

குடும்பத்தாருடன் நல்ல பழக்கம் என்பதால் தான் அவர்கள் வீட்டு விசேஷத்தில் பங்கேற்கிறேன். வாழ்க்கையை பொறுத்தவரை எதுவும் நடக்கலாம், யார் கண்டது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்