திருமணம் செய்வதாக கூறினார்.. அவரிடம் நெருங்கி பழகினேன்! அதன் பின் பிரபல நடிகை பொலிசில் புகார்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான சாய் சுதா, ஒளிப்பதிவாளர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்ததால், அந்த ஒளிப்பதிவாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நானி, விஜய் தேவரகொண்டா நடித்த யவடே சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் சுதா.

குறிப்பாக விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில், தோழியாக இவர் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.

இவர் தெலுங்கு ஒளிப்பதிவாளரான ஷியாம் கே.நாயுடு என்ற ஒளிப்பதிவாளரை காதலித்து வந்தார். ஷியாம் கே.நாயுடு, மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர், வெங்கடேஷ் நடித்த பாடிகார்ட், ராம்சரணின் சிறுத்தா, அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளரான சோட்டே கே.நாயுடுவின் சகோதரர் ஆவார். யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷனின் உறவினர்.

இந்நிலையில், ஷியாம் கே.நாயுடு, சாய் சுதாவை காதலித்து வந்ததுடன், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

அவரின் ஆசை வார்த்தைகளை நம்பிய சாய் சுதா, நெருங்கி பழகியுள்ளார். இருவரும் ஒரே வீடில் வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து தற்போது ஷியாம் கே.நாயுடு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால்சாய் சுதா, ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் காவல்நிலையில், தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி, மோசடி செய்துவிட்டார் என்று புகார் அளித்தார்.

அதன் பின், விசாரணை நடத்திய பொலிசார், ஷியாம் கே நாயுடுவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு ஏற்கனவே போதைபொருள் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஐதரபாத் சினிமா துறையில் போதை பொருள் அதிகமாக புழங்குவதாக ஆண்டு பரபரப்பு கிளம்பியது. இதில் நடிகை சார்மி உட்பட நடிகர், நடிகைகள் சிறப்பு விசாரணை குழுவால் விசாரிக்கப்பட்டனர்.

இதில் ஷியாம் கே.நாயுடுவும் ஒருவர். இவரிடம் விசாரணைக் குழு 10 மணி நேரம் அப்போது விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்