பிரபல நடிகையின் மகனை வீடு புகுந்து சரமரியாக வெட்டிய மர்ம கும்பல்! விசாரணையில் தெரியவந்த உண்மை

Report Print Santhan in பொழுதுபோக்கு

தமிழகத்தில் பிரபல நடிகையின் மகளை 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாயா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை பாபிலோனாவின் அத்தைதான் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ். 34 வயதான இவர் வேலை செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். அதோடு கஞ்சா மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

இந்நிலையில் விக்கி விருகம்பாக்கம் தசரதபுரம் 8-வது தெருவில் உள்ள தனது பாட்டி கிருஷ்ண குமாரி வீட்டில் வசித்து வருகிறார்.

ஏற்கனவே விக்கி மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் விருகம்பாக்கம் பொலிசார் சரித்திர பதிவேடு அவரை குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு கிருஷ்ணா குமாரி வீட்டிற்கு சென்ற 8 பேர் கொண்ட கும்பல், விக்னேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.

இதில் 10 இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய இவரை, கிருஷ்ண குமாரி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வடபழனி மருத்துவமனையில் அனுமதித்தனர்

இதில் அவரது உடம்பில் 6 இடங்களில் 40 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் விக்கி, அப்பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் ஏற்பட்ட மோதல் கைக்கலப்பாக மாறியது.

இதனை தொடர்ந்து தனது கூட்டாளிகளுடன் வந்த கண்ணன், விக்கியை சரமாரியாக வெட்டியது தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்