அவன் என்னை ஏமாற்றிவிட்டான்! விஷம் குடித்து தற்கொலை செய்வதை வீடியோவாக வெளியிட்ட இளம் நடிகை... அதிர்ச்சி காட்சி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

காதலன் ஏமாற்றியதால் பிரபல சீரியல் நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் கர்நாடக மாநிலம் ஹாஸன் மாவட்டத்தில் உள்ள பேலூரை சேர்ந்த சந்தனா(29). அவர் பெங்களூரில் தங்கி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். சந்தனா கடந்த 5 ஆண்டுகளாக தினேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தனா தினேஷிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவரோ, உன் பெற்றோர் முறைப்படி என் வீட்டிற்கு வந்து என் பெற்றோரிடம் பேசினால் மட்டுமே திருமணம் என்று கூறியுள்ளார். இதையடுத்து சந்தனா தன் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

சந்தனாவின் பெற்றோருக்கு தினேஷை சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த பையன் உனக்கு வேண்டாம், அவன் ஏற்கனவே பல பெண்களை காதலித்து ஏமாற்றியவன் என்று கூறியுள்ளனர். ஆனால் சந்தனா தினேஷை தான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடித்துள்ளார்.

வீடியோவை காண

இதையடுத்து சந்தனாவின் பெற்றோர் தினேஷ் வீட்டிற்கு சென்று திருமணம் பற்றி பேசியுள்ளனர். ஆனால் தினேஷின் பெற்றோரோ சந்தனா ஒரு நடிகை, அவர் கேரக்டர் சரியில்லை என்று கூறி கேவலமாக பேசியுள்ளனர். இதனால் இருவீட்டாருக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளது.

வீடு திரும்பிய பெற்றோர் நடந்த விஷயத்தை எல்லாம் சந்தனாவிடம் கூறியுள்ளனர். தினேஷும் தன் பெற்றோர் பக்கம் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சந்தனா இனியும் வாழ வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.

இதையடுத்து அவர் ஒரு கிளாஸில் விஷத்தை ஊற்றி தான் தற்கொலை செய்வதை தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் சந்தனா தேம்பித் தேம்பி அழுது கொண்டே தினேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் தினேஷின் பெற்றோர் தன்னை நிராகரித்துவிட்டதை தன்னால் தாங்க முடியாததை பார்த்து தினேஷ் அதிருப்தி அடைந்ததாகவும் சந்தனா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அழுதுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த சந்தனா திடீர் என்று விஷத்தை குடித்துவிட்டார்.

உடனே சந்தனாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கு அவர் சிகிச்சை பெறாமல் உயிர் இழந்தார். சந்தனா விஷம் குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சந்தனா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பெங்களூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தனாவை ஏமாற்றியதாக தினேஷ் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்