வனிதாவின் பிளான் இதுதான்! என் கணவரை இதற்காகவே திருமணம் செய்து கொண்டாள்: கிழித்து தொங்கவிட்ட முதல் மனைவி

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரின் மூன்றாம் மனைவி இதற்கு எல்லாம் காரணம் வனிதா தான், அவள் தான் எல்லாமே என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான, வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த அடுத்த நாளே, பீட்டர் பாலின் முதல் மனைவி, விவகாரத்து செய்யாமல், வனிதாவை திருமண்ம செய்து கொண்டுள்ளதாக, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனிதாவிடம் இது குறித்து கேட்ட போது, அவர் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார், 8 வருடத்திற்கு முன்னரே இருவரும் பிரிந்துவிட்டதாக கூறினார்.

இதையடுத்த் தற்போது அவரின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், தங்களுடைய திருமணம் 2000-ஆம் ஆண்டு நடந்ததாகவும், எங்களுக்கு ஜான் எட்வார் என்ற பையனும், 3-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், எங்கள் இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அனைத்து குடும்பங்களிலும் இருக்கும் ஒரு சாதர பிரச்சனை தான், அப்படி இருந்த போது தான் கடந்த வியாழக்கிழமை வனிதாவுக்கும், என்னுடைய கணவருக்கும் திருமணம் என்ற விஷயத்தை கேள்விட்டேன்.

உடனடியாக, அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வடபழனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். பொலிசார் அழைத்து விசாரித்த போது, பீட்டர் பால், நான் விவகாரத்து செய்யாமல் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறினார்.

ஆனால், திருமணத்தை ஒரு ரகசியமாக, யாரையும் உள்ளே விடாமல், யூ டியூப் சேனல் மூலம் மட்டும் திருமணத்தை முடித்துவிட்டனர்.

முதலில் அவரிடம் கேட்ட போது, இது எல்லாம் வதந்தி நம்பாதீர்கள் என்று கூறினார். அதன் பின் ஒரு திடீரென்று சமூகவலைத்தளங்களில் வந்துவிட்டதால், நாங்கள் திருமணம் செய்யப்போகிறோம், விவகாரத்திற்கு கையெழுத்து போடு என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன். நான் முடியாது என்றேன். ஆனால் என் அம்மா மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே, என்று பீட்டரிடம் பேசிய போது, அவர் என் மகளுக்கு 25 சவரன் நகை, இரண்டு பிள்ளைகளுக்கும் தல 5 லட்சம் மொத்தம் 10 லட்சம் கொடு என்று ஆத்திரத்தில் பேசிவிட்டார்.

இதை பீட்டர் ரெக்கார்ட் செய்து, காவல்நிலையத்தில், அந்த ரெக்கார்ட்டை போட்டு காண்பித்தார். அதுமட்டுமின்றி என் மகனை வனிதா மற்றும் பீட்டர் பால் இருவரும் அழைத்து பேசியுள்ளனர்.

வனிதா ஒரு திரைப்பிரபலம் என்பதால், என் மகனும் ஏதோ என்று அவர்களுடன் காரில் சென்று வந்துள்ளான். அதையும் அவர்கள் ஒரு ஆதாரமாக, என் மகனுக்கும் இந்த திருமண விவகாரம் தெரியும் என்று கூறுகின்றனர்.

ஆனால், அவன் பாவம் ஏண்டா இப்போ போனோம் என்று வருந்துகிறான்.

வனிதாவிடம் பேசினீர்களா என்று கேட்ட போது, நான் அவரிடம் பேசவில்லை. அவர் நான் நான்கு வக்கீலுக்கு சமம் என்பது போல் கூறியுள்ளார். ஒரு பிரபலம், பண பலம் இருப்பதால் நான் எதாவது பேச போய் அது மாறிவிட்டால், அதன் காரணமாக நான் எதுவும் பேசவில்லை.

காவல்நிலையத்தில் இப்படி ஒரு புகார் இருக்க, ஏன் இவ்வளவு அவசரமாக திருமணம் செய்ய வேண்டும். ஏன் அவர் அம்மாவின் திருமண நாள் இந்த வருடம் மட்டும் தான் வருமா, அடுத்த வருடம் வராது.

என்னை பொறுத்தவரை பீட்டர் நல்ல திறமையானவர், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக், அதுமட்டுமின்றி மதுவுக்கு அடிமையானவர்.

இதனால் அவரின் திறமையை தன்னுடைய யூ டியூப் சேனலுக்கு பயன்படுத்தி கொள்ள இப்படி திட்டத்தை செய்துவிட்டாள்.

வனிதா பீட்டரை துரத்திவிட்டு ஐந்தாவதாக திருமணம் செய்து கொள்வாள், அதையும் சொல்ல முடியாது. ஆனால் அது வாழ்க்கை கிடையாது, ஒருனுக்கு ஒருத்தி என்பது தான் நம் வாழ்க்கை.

பீட்டருக்கும், உங்களுக்கும் என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தீர்கள் என்று கேட்ட போது, அது எல்லாம் பிரிவே இல்லை. என் மகன் 9-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.

அவனுக்கு முழு ஆண்டு தேர்வான அந்த சமயத்தி, பீட்டல் பால், ஓவர் குடியாக இருந்ததால், அவரை அதில் இருந்து மீள்வதற்காக குடியை நிறுத்த உதவும் செண்டர் ஒன்றில் சேர்த்தோம்.

அப்போது அவர் அதில் இருந்து தப்பிக்க முயன்ற போது, உடலில் அடிபட்டு இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டார். அதன் பின் என் குழந்தைகளின் படிப்பிற்காக தாய் வீட்டிற்கு வந்தேன், என்னுடைய பொருட்களை எல்லாம் மாமியார் வீட்டில் தான் இருக்கின்றனர்.

நாங்கள் இருவருடன் 8 ஆண்டுகளாக பிரியவில்லை, 4 ஆண்டுகள் தான் ஆகிறது. அதுவும் அவர் இடையில் வருவார், குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பார், இடையில் வனிதா வந்து தான் என் வாழ்க்கையை நசமாக்கிவிட்டாள்.

அவரும் குடிக்கு அடிமையாகி, பல இடங்களில் வேலை போய்விட்டதால், இனி இவளிடம் இருந்துவிடலாம் என்று திருமணம் செய்து கொண்டார். எல்லாத்திற்கு காரணம் வனிதா தான், நான் விவகாரத்து கொடுக்கமாட்டேன், நீதிவேண்டும் என்று கூறியுள்ளார்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்