தங்க கடத்தல் கும்பலுடன் நடிகை பூர்ணாவுக்கு தொடர்பா? வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

பிரபல நடிகையான பூர்ணா அளித்த புகாரின் பேரில் மோசடி கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

அந்த கும்பல் இதற்கு முன்னரும் பிரபலங்களை மிரட்டி பணம் பறித்திருப்பதும், தங்க கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நடிகை பூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில்.

அதில், “இந்தக் கடினமான சூழலில் எனக்கு ஆதரவளித்த நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றி.

என்னுடைய விவகாரம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான உண்மைக்கு மாறான தகவல்கள் பற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த மிரட்டல் கும்பலையும், முக்கியக் குற்றவாளியையும் எனக்குத் தெரியாது. குற்றவாளியோடு என்னைத் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

போலிப் பெயர்கள், போலி முகவரிகள், போலி அடையாளங்கள் மூலம் எங்களிடம் திருமணம் குறித்துப் பேசி எங்களை அவர்கள் ஏமாற்றியதால் எங்கள் குடும்பத்தினர் அவர்கள் மீது புகாரளிக்க முடிவு செய்தனர்.

நாங்கள் சட்டப்படி நடவடிக்கைக்காக போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்ததாலேயே அவர்களின் மிரட்டலுக்கு ஆளானோம்.

அவர்களின் நோக்கம் என்ன என்று எங்களுக்கு அப்போதும் தெரிந்திருக்கவில்லை, இப்போதும் தெரியவில்லை.

தற்போது, என்னுடைய புகாரை ஏற்று கேரள பொலிசார் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர்.

எனவே, விசாரணை முடியும் வரை என்னுடைய, என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிட வேண்டாம் என்று ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு முடிந்ததும் ஊடகங்களை நிச்சயமாக சந்திப்பேன்.

என் வாழ்வின் மிகவும் கடினமான ஒரு கட்டத்தில் எனக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் நின்ற என் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்