கணவன் இறந்தால் நெற்றி பொட்டு அழிக்கப்படுவது தான் கலாச்சாரமா? மீண்டும் சூடாக பேசிய நடிகை வனிதா

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
5445Shares

வார்த்தையை விடுவது சுலபம், அதனால் தவறாக பேசாதீர்கள் என நடிகை வனிதா உருக்கமாக கூறியுள்ளார்.

பிரபல நடிகை வனிதாவுக்கும், பீட்டர் பால் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்தது விமர்சனத்துக்குள்ளானது.

இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணா போன்ற பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் வனிதா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் வனிதா லைவில் பேசியுள்ளார். அப்போது தனக்கு தேவையானதை தனது அம்மா யாரோ ஒருவர் மூலம் செய்கிறார் என்று கூறினார்.

அடுத்து பேசுகையில், மனிதர்களில் இத்தனை நிறங்களா? இன்னைக்கு இருக்கீங்க, நாளை இருப்பீங்களா? உங்க குடும்பத்துல எல்லாரும் இருப்பாங்களா? என்ன வேணும்னாலும் நடக்கலாம்.

நான் ஒரு ஹியூமன் பீயிங், பெண்,தாய், மனைவி இந்த நேரத்தில் நான் லைவில் வந்து பேசுகிறேன்.

வார்த்தை விடுவது சுலபம், ஆனால் தவறாக பேசதீர்கள். கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்காரு. கர்மா யாரை எங்கே வச்சு வாங்கும்னு தெரியும் தெரியாது.

நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்ல, எனக்கு வாரிசு இருக்கு. எத்தனை பேருக்கு இருக்குன்னு தெரியாது. நான் குற்றவாளி இல்லை.

நான் சிங்கப் பெண். சிங்கம் என்ன செய்யும் மானை வேட்டையாடி கிழிச்சு சாப்பிடும். தவறுதான் ஆனா அது உயிர் வாழனும்னா அது அப்படிதான் செய்யனும்.

பெண்கள் அனைவரும் தைரியமானவர்கள் தான். கணவன் இறந்துவிட்டால் நெற்றி பொட்டு அழிக்கப்பட்டு வலையலை உடைப்பீர்களே, அதான் கலாச்சாரமா என்று பேசியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்