வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் மன உளைச்சலில் உள்ள அவரின் மூத்த மகன்! வெளியான முழு தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் அவரது முதல் கணவரான நடிகர் ஆகாஷும் அவரது மகனும் பெரும் மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனிதா விஜயகுமார் கடந்த 27ஆம் திகதி பீட்டர் பால் என்பவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஆகாஷ் என்பவருடன் முதல் திருமணம் நடந்தது, வனிதா - ஆகாஷ் தம்பதிக்கு ஸ்ரீ ஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். அதன் பின்னர் இவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இரண்டாவது திருமணமும் வனிதாவிற்கு நிலைக்கவில்லை.அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரையும் விவாகரத்து செய்து தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

வனிதாவின் மூன்றாவது திருமணத்துக்கு பின்னர் அவரின் மூத்த மகன் ஸ்ரீஹரி வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. அவருடைய நண்பர்களுக்கும் திருமணம் பற்றியும் தெரியும் என்பதால் அதைப் பற்றிக் கேட்பார்கள் என அவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் போட்டோவை பதிவிட்டால் கூட நம்மை அடையாளம் கண்டு அதைப் பற்றிக் கேட்பார்கள் என்ற ஒரே காரணத்தால் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்தே 23 வயதான ஸ்ரீஹரிக்கு தனது தாயார் வனிதாவின் மூன்றாவது திருமணத்தால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது.

இதோடு வனிதாவின் முதல் கணவரும் நடிகருமான ஆகாஷும் புழுங்கி போய் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வனிதா திருமண செய்திகளால் இருவருமே இறுக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. அப்பா மகன் இருவருமே எதிலும் பட்டும் படாமல் ஒதுங்கியுள்ளனராம். வெளியாட்களுடன் சரிவர பேசுவதில்லை. எதிலும் கலந்துகொள்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதே நிலைதான் விஜயக்குமாரின் குடும்பத்திலும் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்