இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருந்திருக்கலாமே அப்பா! இறந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் மகன் உருக்கம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
2041Shares

பிரபல பாடலாசிரியரான உயிரிழந்த நா.முத்துக்குமாரின் பிறந்தநாளான இன்று அவரின் மகன் உருக்கமான கவிதை ஒன்று எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்பிரபலங்கள் தான் எப்போதும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பர். அந்த வரிசையில் பிரபல பாடலாசிரியரான நா.முத்துக்குமாரும் ஒருவர்.

இவரின் பாடல் வரிகளுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் அடிமை. அப்படி இருக்கையில், திடீரென்று கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

இது திரைப்பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில், இன்று நா.முத்துகுமாரின் பிறந்தநாளை, ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில், அவரின் மகனான ஆதவன் தனது தந்தைக்கு எழுதியுள்ள கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

- மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்