இளம் வயதில் உயிரிழந்த பிரபல நடிகை! வலி இல்லாத வாழ்க்கை கிடைக்கட்டும் என உருக்கமான கடைசி பதிவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
2199Shares

பிரபல நடிகை திவ்யா சாக்‌ஷி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

பாலிவுட் சீரியல் நடிகையான திவ்யா சாக்‌ஷி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதை திவ்யாவின் உறவினர் சவும்யா அமிஷ் வர்மா தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இதை சொல்வது மிகுந்த வேதனையை தருகிறது. எனது உறவினர் திவ்யா சாக்‌ஷி, இந்த இளம் வயதில் புற்றுநோயால் மரணமடைந்துவிட்டார்.

லண்டனில் அவர் நடிப்பு பயிற்சிப் பெற்றவர். சில படங்களில் நடித்திருக்கிறார். பாடகியாகவும் அவர் வளர்ந்து வந்தார் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் உருக்கமானப் பதிவு ஒன்றை திவ்யா சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், நான் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த போதுமான வார்த்தைகள் இல்லை. சில மாதங்களாகத் தப்பி ஓடி, இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்! வலி இல்லாத மற்றொரு வாழ்க்கை கிடைக்கட்டும். தயவு செய்து கேள்விகள் வேண்டாம். என்னை நீங்கள் எவ்வளவு அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என பதிவிட்டுள்ளார்.

திவ்யாவின் மறைவுக்கு பல்வேறு நடிகர், நடிகைகளும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்