நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா பரவ இவரா காரணம்? குடும்பத்தையே தாக்கியது எப்படி? வெளிவரும் தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு
3560Shares

பிரபல திரைப்பட நடிகரான அமிதாப்பின் குடும்பத்தையே கொரோனா பிடித்துவிட்ட நிலையில், அவர்களின் உடல் நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன்(77) மற்றும் அவரது மகனான் அபிஷேக் பச்சனுக்கு(44) கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இருவருக்கும், மும்பை, நானாவதி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஒரு தகவலில், மருத்துவ ரீதியாக இருவருமே உடல்நிலையும் சீராக இருந்து வருகிறது.

வழக்கமான சிகிச்சை இப்போதைக்கு போதுமானது. கூடுதல் அல்லது மேல் சிகிச்சை அவர்களுக்கு தேவை கிடையாது.

முதல்கட்ட மருந்துகளை அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் உடல் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தவிர தெரபி சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.

ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ அடிப்படை தேவைகளும் இருவர் உடலிலும் சரியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அபிஷேக் பச்சன் மனைவியும், நடிகையுமான 46 வயதாகும், ஐஸ்வர்யா ராய் மற்றும் இந்த தம்பதியின் 8 வயது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதேநேரம் இவர்களை விடவும் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் வைரஸ் அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அபிஷேக் பச்சன் சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றுக்காக டப்பிங் பேசுவதற்கு ஸ்டுடியோ சென்றுள்ளார். இதன் மூலமாகத்தான் அவர் குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், மும்பை மாநகரத்தில் தான் இந்தியாவிலேயே அதிகப்படியான கொரானா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்