ஏரியில் மாயமான பிரபல நடிகை சடலமாக மீட்பு: உறுதி செய்த பொலிசார்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
154Shares

பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா, 5 நாட்களுக்கு முன்னர் ஏரி ஒன்றில் மாயமான நிலையில், தற்போது அதே ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை பிரு ஏரியில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வென்ச்சுரா கவுண்டி ஷெரிப் ட்வீட் செய்துள்ளார்.

33 வயதான நடிகை நயா, ஜூலை 8 அன்று தனது நான்கு வயது மகன் ஜோசியுடன் கலிபோர்னியா ஏரியில் படகு பயணத்தில் இருந்த போது திடீரென்று மாயமானார்.

இதனையடுத்து அவர் இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பு செந்தேகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் மாயமானதாக கூறப்பட்ட ஏரியில் இருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. அது மாயமான நடிகை நயாவின் சடலமா என்பது தொடர்பில் பொலிசார் இன்னமும் உறுதி செய்யவில்லை.

நடிகை நயா ரிவேரா நடிகர் ரியான் டோர்சே என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஜோஸி ஹாலிஸ் என்ற மகன் உள்ளார். 2 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பின்னர் விவாகரத்து பெற்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த நடிகை ரிவேரா, தனது 4 வயது மகனுடன் படகு சவாரி செல்ல திட்டமிட்டு,

கலிபோர்னியாவின் வென்சுராவில் உள்ள பிரு ஏரிக்கு கடந்த புதன்கிழமை சென்றார். அங்கு ஒரு படகை, நண்பகல் ஒரு மணிக்கு வாடகை அமர்த்திக் கொண்டார்.

அந்த படகு ஏரியில் சென்றுகொண்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் படகு திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பரமாரிப்பாளர்கள் மற்றொரு படகில் சென்று பார்த்தனர். நடு ஏரியில் அந்தப் படகு இருந்தது. ஆனால், நடிகையை காணவில்லை. அதில் அவர் மகன் மட்டுமே இருந்துள்ளான்.

நயா ரிவேராவுக்கான லைஃப் ஜாக்கெட்டும் படகில் அப்படியே இருந்துள்ளது. அவர் மகன் படகில் தூங்கியபடி இருந்துள்ளான்.

அவன் உடலில் கவச உடை பொருத்தப்பட்டிருந்தது. பொலிசார் அவனிடம் விசாரித்தபோது, அம்மா ஸ்விம்மிங் சென்றார், திரும்ப வரவில்லை என்று கூறியுள்ளான்.

இந்த நிலையில் நயா ரிவேரா மாயமாகி 5 நாட்களுக்கு பிறகு, அதே ஏரியில் இருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்