எவ்ளோ தான் போராடுவது: நடுரோட்டில் கண்ணீர் விட்டு கதறிய வனிதா விஜயகுமார்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

கடந்த சில வாரங்களாகவே சமூகவலைத்தளங்கள் பரபரக்கும் விடயம் வனிதாவின் மூன்றாவது திருமணம் தான்.

ஏற்கனவே இருமுறை திருமணமாகி விவாகரத்தான வனிதா, கடந்த மாதம் 27ம் திகதி பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த புகைப்படங்கள் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாக, கூடவே சர்ச்சையும் தொற்றிக் கொண்டது.

என்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர்பால் எப்படி வனிதாவை திருமணம் செய்ய முடியும்? என அவரின் முதல் மனைவி எலிசபெத் பொலிசில் புகார் அளித்தார்.

இதனால் வனிதாவுக்கு எதிராக சில பிரபலங்கள் கூட சமூகவலைத்தளங்களில் பேசத் தொடங்கினர், அதேவேளை ஆதரவாகவும் சிலர் பேசினர்.

மிக முக்கியமாக சூர்யாதேவி, தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வந்தனர்.

இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று தன்னுடைய வக்கீலுடன் செய்தியாளர்களை சந்தித்தார் வனிதா.

அதில், ஒரு பெண்ணாக நான் எவ்வளவு தான் போராடுவது, ஏன் இப்படி கொச்சைவார்த்தைகள் பயன்படுத்தி திட்டுகின்றனர் என பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு அழுதார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்