பிரபல திரைப்பட நடிகர் மாரடைப்பால் மரணம்!

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
513Shares

பிரபல மூத்த திரைப்பட நடிகர் ரவி கொண்டலா ராவ் மாரடைப்பால் காலமானார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட ரவியின் வயது 88.

600க்கும் அதிகமான திரைப்படங்களில் தந்தை, தாத்தா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார் ரவி.

தனது திரைப்பயணத்தை கடந்த 1950ல் தொடங்கிய ரவியின் முதல் படம் ஷோபா. தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளதோடு தமிழ் மற்றும் மலையாள திரைப்பட திரைப்படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.

ரவியின் மனைவி ராதா குமாரி பிரபல நடிகையாவார். இவர் கடந்த 2012ல் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரவி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்