கொரோனாவில் இருந்து மீண்ட ஐஸ்வர்யா ராய் உருக்கம்.. வெளியிட்ட புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
2190Shares

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் உருக்கமான பதிவு ஒன்றை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உலகையே கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுற்றுத்தி வரும் நிலையில் கடந்த 11-ம் திகதி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் திகதி ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

10 நாட்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற ஐஸ்வர்யாராய், ஆராத்யா இருவரும் கடந்த ஜூலை 27-ம் திகதி நலமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை ஐஸ்வர்யாராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார்.

அதில், எனது குடும்பத்தினர் நலம் பெற நீங்கள் காட்டிய அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். உங்களின் இந்த அன்பைக் கண்டு எனது இதயம் கரைந்துவிட்டது. மிக்க நன்றி என்று கையெடுத்து வணங்குவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாராய் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்