நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் நீதிமன்ற நோட்டீசுக்கு வனிதா விடுத்துள்ள சவால்! அதை அப்படியே பதிவிட்டுவிட்டார்

Report Print Santhan in பொழுதுபோக்கு
4305Shares

பிரபல திரைப்பட நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னை ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் கேட்டு தன்னை மிரட்டுவதாக வனிதா விஜயக்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வனிதா விஜயக்குமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பால், அவருடைய முதல் மனைவியான எலிசபத்தை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதால், திரைப்பிரபலங்கள் பலரும் எலிசபத்திற்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஆதரவாக நிற்கின்றனர்.

அப்படி ஒருவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். அப்படி இருக்கும் போது, ஒரு நேரலையில், வனிதா விஜயக்குமார், லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனை மிகவும் மோசமாக திட்டி பேசினார்.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில், தற்போது, தன்னையும் தனது கணவர் ராமகிருஷ்ணனனையும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியதற்கு வனிதா மன்னிப்பு கோர வேண்டும் என மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அந்த நீதிமன்ற நோட்டீஸ் தகவல் அடங்கிய காப்பியை வனிதா அப்படியே டுவிட்டரில் பதிவிட்டு,

நல்ல உள்ளம் கொண்ட சமூக போராளி, ஒரு கோடியே 25 லட்சம் கொடுக்க வேண்டும் என தன்னை மிரட்டுவதாகவும், இது தொடர்பான வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தான் தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்