பிரபல நடிகையின் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை! என்ன காரணம்? வெளி வரும் தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையின் கணவரும், நடிகருமான அஸ்துஷ் பக்ரே வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மராத்தி நடிகையான Mayuri Deshmukh(27)-வுக்கும் நடிகரான Aashutosh Bhakre(32)-க்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் திகதி, 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை மஹாராஷ்டிராவின் Nanded-ல் உள்ள தனது இல்லத்தில் Aashutosh தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று, புதன் கிழமை பிற்பகல் Aashutosh Bhakre-ன் மனைவி Mayuri Deshmukh தனது மாமியாருடன் வீட்டின் கீழே பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது Aashutosh Bhakre மாடிக்கு சென்று தூங்குவதாக தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் கீழே வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவர் அறையின் கதவை தட்டியுள்ளனர்.

கதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், அறையின் ஜன்னல் கதவின் வழியே எட்டிப் பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது வரை அவர் இறப்பிற்கான காரணம் சரியாக தெரியவில்லை, ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது.

Ecchar Tharla Pakka என்ற படத்தில் நடித்த பிறகு அதிகம் பேசப்பட்ட நடிகராக Aashutosh Bhakre வலம் வந்தார் . Khulta Kali Khulena என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அவரது மனைவி Mayuri Deshmukh மிகவும் பிரபலம் ஆனார்.

சமீபத்தில், திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு நடிகர் மன அழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுவதால், கொரோனா காலத்தில் மன அழுத்தம் ஒரு மிகப் பெரிய உயிரை எடுக்கும் நோயாக மாறி வருகிறது என்பது மட்டும் தெரிகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்