நடிகர் அனில் முரளி காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Basu in பொழுதுபோக்கு

மலையாள நடிகர் அனில் முரளி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 56.

கல்லீரல் தொடர்பான வியாதிகளால் அவதிப்பட்டு வந்த அனில் முரளி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்..

அனில் முரளி மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். வில்லனாக திரைத்துறை வாழ்க்கையை தொடங்கிய அனில் முரளி பின்னர் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

மறைந்த அனிலுக்கு மனைவி சுமா, ஒரு மகன் ஆதித்யா மற்றும் ஒரு மகள் அருந்ததி உள்ளனர்.

அனில் முரளியின் மறைவுக்கு திரைதுறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அனில் முரளி ஆறு மெழுகுவத்திகள், தனி ஒருவன், கொடி, ஜீவி, வால்டர் உட்பட திரைபடங்கில் நடித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்