இசைஞானி இளையராஜாவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு! பொலிசில் புகார்: வெளியான தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒரு அரங்கில் இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக தனது இசைக்கருவிகளையும் இசை குறிப்புகளையும் வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரசாத் ஸ்டூடியோவுக்கும் இளையராஜாவுக்கும் அந்த இடம் குறித்த பிரச்சனை நடந்து வருகிறது.

இதனால், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, தனது அலுவலகத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள இசை கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோய் விட்டதாகவும், தனது விலைமதிப்பில்லாத இசைக்குறிப்புகளும் சேதமடைந்துவிட்டதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளையராஜாவின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் திருடு போய்விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்