பிரபல இளம் தொலைக்காட்சி தொகுப்பாளினி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல தொகுப்பாளினி மற்றும் செய்தி வாசிப்பாளர் ப்ரியா ஜுனிஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

டெல்லியில் வசித்து வந்த ப்ரியா சமீபத்தில் பிரபல பாடகர் கைலாஷை பேட்டி எடுத்த நிகழ்ச்சி வைரலானது.

இந்த நிலையில் 24 வயதான ப்ரியா தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரின் சடலத்தை மீட்ட பொலிசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் ப்ரியா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

ஆனாலும் அவர் தற்கொலைக்கான காரணம் உடனடியாக அறியப்படவில்லை.

பொலிசார் கூறுகையில், ப்ரியாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளோம். அவர் தனது பெற்றோர், இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் உடன் வசித்து வந்தார்.

ப்ரியா வீட்டில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறியுள்ளனர்.

ப்ரியாவின் மறைவுக்கு அவரின் நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்