சீமானுக்கும், தனக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து இந்த பிரபலத்திற்கு தெரியும்! உண்மையை உடைத்த நடிகை விஜயலட்சுமி

Report Print Santhan in பொழுதுபோக்கு

சீமானுக்கும், தனக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து இயக்குனரும், நடிகருமான அமீருக்கு தெரியும் என்று டநடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக கூறி வருகிறார். அவருக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்.

இது போன்ற நிலையில் தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை முயற்சி செய்தார்.

என்னுடைய இந்த முடிவுக்கு சீமான் மற்றும் ஹரிநாடார் தான் காரணம் என்பது போல் பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுகிறது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் விஜயலட்சுமி, தனக்கும், சீமானுக்கும் இடையே இருந்த உறவு குறித்து அமீருக்கு தெரியும்.

ஏன் அவர் இதைப் பற்றி பேச மறுக்கிறார்? அவர் ஏன் காப்பாற்ற துடிக்கிறார்? ராமேஷ்வரத்தில் பேசு சீமான் கைது செய்யப்பட்ட போது, அதன் பின் கோயமுத்தூர், அதைத் தொடர்ந்து பாளையங் கோட்டை சிறை, அப்புறம் காளபாட் சிறை, இந்த நான்கு முறையும், நான் சீமான் உடன் தான் இருந்தேன்.

இது எல்லாருக்குமே தெரியும், சீமான் இதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்