தற்கொலைக்கு முன்னர் கூகிளில் மூன்று விடயங்களை தேடிய நடிகர் சுஷாந்த் சிங்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தமது பெயர் உட்பட மூன்று விடயங்களை கூகிளில் தேடியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் bipolar disorder என்ற நோய்க்கான சிகிச்சையில் இருந்து வந்ததாக கூறும் மும்பை மாநகர தலைமை பொலிஸ் அதிகாரி பரம்பீர் சிங்,

சுஷாந்த் தற்கொலையில் அரசியல் தலையீடு இருந்ததற்கான எந்த ஆதாரவும் இதுவரை இல்லை என தெரிவித்துள்ளார்.

ஜூன 14-ஆம் திகதி தற்கொலை செய்து கொள்வதற்கும் சில மணி நேரம் முன்னர் கூகிளில் சுஷாந்த் சொந்த பெயர் தொடர்பான தகவல்களை தேடியதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி தனது முன்னாள் மேலாளர் திஷா தொடர்பிலும் சுஷாந்த் கூகிளில் தேடியுள்ளார். சுஷாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கும் ஒரு வாரம் முன்னர் ஜூன் 8 ஆம் திகதி அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து திஷா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் தம்மீதும் விசாரணை வரலாம் என்பதால் சுஷாந்த் கூகிளில் தேடியிருக்கலாம் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தமது bipolar disorder தொடர்பிலும் சுஷாந்த் கூகிளில் தேடியுள்ளார். மட்டுமின்றி மும்பை நகரில் உள்ள நான்கு முக்கிய மருத்துவர்களிடம் அவர் ஆலோசனையும் பெற்றுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்