நடிகை சுகன்யா நெற்றியில் யாரை வைத்திருக்கிறார் பார்த்தீங்களா? அவரே ஆர்வமாக பதிவிட்ட புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான சுகன்யா, இன்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் திரைப்பிரபலங்கள் என்ன செய்தாலும், அது உடனே வைரலாகிவிடும். அந்த வகையில் இன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்கள் சிலர் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான சுகன்யா, தன்னுடைய நெற்றியில் ராமரின் உருவத்தை பொட்டாக வைத்து, அதை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் சுகன்யா மேம்மா இது? ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அதுக்கு என்று இப்படியா என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதே சமயம் ஒரு சிலர் அவரை புகழ்ந்து, பாராட்டி வருகின்றனர்.

51 வயதாகும் சுகன்யா பரத நாட்டியத்திலும், ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபடு கொண்டவர் ஆவார். தீவிர ராம பக்தையான இவர் இப்படி செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு சுமார் 31 ஆயிரம் லைக் மற்றும் 2000-க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சுகன்யா தனது நெற்றியில் ஸ்ரீ ராமரின் உருவத்தை பொட்டாக வரைந்து தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதுவரை அவரது புகைப்படத்தை சுமார் 31 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 2600க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்