மறைந்த பிரபல இந்திய நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி அவர்கள் குடும்ப உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்ற போது, குளியல் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக கூறப்பட்டது.
ஸ்ரீதேவியின் மரணம் பாலிவுட் திரையுலகு மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
துபாய் பொலிசார் நடத்திய விசாரணையின் முடிவில், 'எதிர்பாராமல் நடந்த விபத்து' என கூறப்பட்டது.
இந்நிலையில் ரூ.240 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்ரீதேவியை கொலை செய்து விட்டார்கள் என்றும், சுஷாந்த் வழக்கை போன்று ஸ்ரீதேவியின் வழக்கையும் சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பலரும் டுவிட்டரில் கமெண்டுகளை பதிவிட, #CBIEnquiryforSridevi என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வந்தனர்.
Actual post mortem report of Sridevi#CBIEnquiryForSridevi pic.twitter.com/v4qALJy65F
— Angel (@Angel38016412) August 11, 2020