தீவிர சிகிச்சை... S.P.B-யின் உடல் நிலை குறித்து அவரது மகன் வெளியிட்ட தெளிவான தகவல்!

Report Print Santhan in பொழுதுபோக்கு

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை குறித்து மகன் சரண் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் புகைப்படத்தை, நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து தற்போது எஸ்.பி.பியின் மகன் சரண், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அப்பாவின் உடல் நிலை குறித்து இணையத்தில் வரும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்.

அப்பா தீவிர சிகிச்சையில்(Critical) இருக்கிறாரே தவிர, அவரது உடல் நிலை அந்தளவிற்கு மோசமாக செல்லவில்லை, நலமுடன் இருக்கிறார்.

அவர் விரைவில் திரும்புவார், உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இசைஞானி இளையராஜா பாலு சீக்கிரம் எழுந்து வா உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று உருக்கமுடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்