பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

Report Print Basu in பொழுதுபோக்கு
1713Shares

கொரோனா நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் ஆகஸ்ட் 5ம் திகதி சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 19ம் திகதி மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கிறது.

மேலும், தற்போது சீராக இருக்கும் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை உயர்மட்ட மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்