பிரபல பின்னணி பாடகியான சுனிதா உபத்ரஷ்தா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அதிகளவான பாடல்களை பாடியுள்ளவர் சுனிதா.
இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், எனது உடல்நிலை குறித்து ஏராளமான அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன, உங்கள் அனைவருக்கும் நன்றி.
சில தினங்களுக்கு முன்னர் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது, தலைவலித்ததால் அலட்சியம் செய்யாமல் பரிசோதனை செய்தேன், இதில் தான் தொற்று தெரியவந்தது.
தற்போது நான் குணமடைந்துவிட்டேன், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன், மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.
எஸ்பிபி அவர்களின் உடல்நிலை குறித்து கவலையடைகிறேன், அவர் விரைவில் குணமடைய நானும் எனது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.