கொரோனா நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் ஆகஸ்ட் 5ம் திகதி சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 19ம் திகதி மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது சீராக இருக்கும் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை உயர்மட்ட மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தது.
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 20ம் திகதி எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது, உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் ரசிகர்களுடைய வெண்டுதல் அவரை மீட்கும் என நம்புகிறேன்.
கடவுளுக்கு மனசாட்சி இருக்கு, அப்பாவ மீட்டு தருவார். பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் நன்றி என எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
No considerable change in singer #SPBalasubrahmanyam 's condition. He continues to be critical. His son #SPBCharan on his father's health condition today! #SPBalasubramaniam #SPB @charanproducer #SPcharan pic.twitter.com/8A1qHGv8o0
— Manigandan K R (@cineobserver) August 20, 2020