S.P.B-யின் உடல் நிலை எப்படி இருக்கு? என்ன சிகிச்சை? சற்று முன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை

Report Print Santhan in பொழுதுபோக்கு
6835Shares

பிரபல பாடகரான எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

அதைத் தொடர்ந்து அவரது மகன் எஸ்.பி.சரண் அவரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றாலும் ரசிகர்களுடைய வெண்டுதல் அவரை மீட்கும் என நம்புகிறேன். கடவுளுக்கு மனசாட்சி இருக்கு, அப்பாவ மீட்டு தருவார் என்று கண்கலங்கிய நிலையில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில், தற்போது இரவு சரியாக 8.30 மணிக்கு எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெண்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்