நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
8187Shares

நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1995-ம் ஆண்டு விஜய் நடித்த 'சந்திரலேகா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதனைத் தொடர்ந்து நடித்த படங்கள் யாவும் போதிய வரவேற்பைப் பெறவில்லை என்பதால் திரையுலகிலிருந்து விலகினார். 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார் வனிதா.

அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007-ல் விவாகரத்து பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010-ல் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி வனிதா மூன்றாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்