மருத்துவர்களிடம் பேசினேன்! 90 சதவீதம் அப்பா... S.P.B மகன் இன்றுவெளியிட்ட வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு
4416Shares

அப்பா 90 சதவீத மயக்க நிலையில் இருந்து வெளியில் வந்துள்ளார் என்று அவரது மகன் எஸ்.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் காரணமாக, சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரிடன் உடல் நிலை திடீரென்று கவலைக்கிடமானதால், அப்பாவின் உடல்நிலை குறித்து, காலை மற்றும் மாலை என அவருடைய மகன் எஸ்.பி.சரண் தொடர்ந்து தகவல்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சற்று முன் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எஸ்.பி.சரண வெளியிட்டுள்ள வீடியோவில், இன்று மருத்துவர்களுடன் பேசினேன்.

அப்பாவால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசுவதற்கு பதிலளிக்க முடிகிறது. அவர் 90 சதவீதம் மயக்கநிலையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

எங்கள் குடும்பத்தின் சார்பாக நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பலர் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்தார்கள். விரைவில் அவர் குணமாகி வருவார் என உறுதியாக நம்புவோம். அப்பாவின் உடல்நிலை குறித்து நான் கொடுத்து வரும் அப்டேட்களை தொடர்ந்து வருபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல நாள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்