பிரபல சீரியல் நடிகை சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா? அழகிய ஜோடியின் புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
3078Shares

பிரபல சீரியல் நடிகையான சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் அந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டர் மூலம், ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமூகவலைத்தளங்களில் இவரை ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவருக்கு சென்னையில் உள்ள GPN பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. சித்ரா திருமணம் செய்து கொள்ளும் நபரின் பெயர் ஹேமந்த் ரவி என்பதும் தெரியவந்துள்ளது.

தனது திருமணம் குறித்து சித்ரா, இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தங்களுக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்ததிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்