பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தற்போதைய நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான எஸ்பிபி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இன்று வெளியான அறிக்கையில், வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை தொடர்வதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் சுயநினைவுடனும், சொல்வதை புரிந்துகொள்ளும் வகையிலும் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.