நடிகர் முரளியின் இளைய மகனுக்கு எளிமையாக நடந்து முடிந்த திருமணம்! மணப் பெண் யார் தெரியுமா? இதோ புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
12407Shares

பிரபல திரைப்பட நடிகரான முரளியின் கடைசி மகனான விகாஷிற்கு எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அந்த அழகிய ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தவர் தான் நடிகர் முரளி, இவருக்கு ஷோபா என்ற மனைவியும், காவ்யா, அதர்வா மற்றும் ஆகாஷ் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2010-ஆம் ஆண்டு முரளி திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததையடுத்து, அப்பாவின் வழியில் இப்போது அவருடைய இரண்டாவது பிள்ளையான அதர்வா திரைத்துறையில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில், தற்போது அதர்வாவின் தம்பியும், கடைசி பையனுமான ஆகாஷிற்கு கடந்த 24-ஆம் திகதி சிநேகா பிரிட்டோ என்பவரும் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சிநேகா பிரிட்டோ இயக்குநராகி 'சட்டம் ஒரு இருட்டறை 2' என்னும் படத்தை இயக்கினார். இவர் 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் ஆவார். சேவியர் பிரிட்டோ மிகப்பெரிய தொழிலதிபர். ஆகாஷ் - சிநேகா பிரிட்டோ இருவரின் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.

இது தொடர்பாக அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இருவரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாங்கள் மனம் நிறைந்த மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

எங்கள் இல்லத் திருமண நிகழ்வு அனைவரின் ஆசீர்வாதத்திலும் நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் சூழ, இனிதாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வை இன்னும் பிரம்மாண்டமாக காலத்தின் மறக்க முடியாத, இரு குடும்பங்களின் கொண்டாட்ட நிகழ்வாக உங்கள் எல்லோரையும் அழைத்து நடத்தவே ஆசைப்பட்டோம்.

ஆனால், தற்போதைய சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு குடும்ப சொந்தங்கள் மட்டுமே, பங்கேற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

ஆனால், மிக விரைவில் நிலைமை சரியானவுடனே திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் அழைத்து ஒரு பிரம்மாண்ட வரவேற்பு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்