எஸ்பிபி உடல்நிலை குறித்து மகன் சரண் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.பி.சரண் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தொடர்ந்து தகவலளித்து வருகிறார்.

ஆகஸ்ட் 31 எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

அப்பா ஃபிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப் பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அவரது சுவாசமும் சற்று சீராகியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செப்டம்பர் 2ம் திகதி எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள தகவலில், எஸ்பிபி-யின் உடல்நிலை சீராக உள்ளதாகவும். அவர் மெதுவாக குணமடைந்து வருகிறார் என எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்