ஆபாச உடையில்...? பிரபல நடிகையை தாக்கிய கும்பல்: கதவை பூட்டி வெளியே விடாமல் தடுப்பதாக கதறிய வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு
3070Shares

பிரபல திரைப்பட நடிகையான சம்யுக்தா ஹெக்டே உடற்பயிற்சி செய்யும் போது, தன்னையும், தன் நண்பர்களையும் சில தாக்கியதாக கூறி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் சம்யுக்தா ஹெக்டே.

அதுமட்டுமின்றி, ஜீ.வி.பிராகாஷ் நடிப்பில் வெளிவந்த வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட தமிழ்ப்படங்களிலும், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும், இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இந்நிலையில், சம்யுக்தா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பூங்காவிற்கு உடற்பயிற்சி செய்ய தானும் தனது நண்பர்கள் 3 பேருடன் வந்தோம்.

அப்போது, தனது உடையைக் காரணம் காட்டி அங்கிருந்த சிலர் தனது நண்பர்களை தாக்கியதாகவும், ஆபாச நடனமாடியதாக பொய் புகார் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவீடியோவில் பெண் ஒருவர் சம்யுக்தாவைப் பார்த்து பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வாக்குவாதத்தின் போது அங்கு காவல்துறையினர் வந்து விசாரணை நடத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் தன்னை பூங்காவை விட்டு வெளியேற முடியாதபடி கதவை பூட்டியிருப்பதையும் சம்யுக்தா ஹெக்டே தனது லைவ் வீடியோவில் காண்பித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் சம்யுக்தாவின் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்