கணவர் அடித்து கொடுமைப்படுத்துகிறார்! விவாகரத்து கேட்டு மிரட்டி அருவருப்பாக நடக்கிறார்... பிரபல நடிகை கண்ணீர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிமன்றத்தில் பிரபல நடிகை வர்ஷா பிரியதர்ஷினி வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒடிஷா திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் வர்ஷா பிரியதர்ஷினி.

இவரும் பிரபல நடிகருமான அனுபவ் மொகந்தியும் கடந்த 2014ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், அனுபவ் மொகந்தி தன்னை கொடுமைப் படுத்துவதாக, அவரது மனைவி வர்ஷா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மதுவுக்கு அடிமையான என் கணவர் என்னை அடித்து உதைக்கிறார்.

விவாகரத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று மிரட்டி வற்புறுத்தினர். என்னை மீண்டும் சினிமாவில் நடிக்கக் கூடாது என்றும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கொடுமைப்படுத்துவதோடு அருவருப்பாக நடந்து கொள்கிறார்.

நான் படங்களில் நடித்திருந்தால், எனக்கு வருமானம் கிடைத்திருக்கும். எனக்கு நஷ்ட ஈடாக, 15 கோடி ரூபாயை அனுபவ் வழங்க வேண்டும். மேலும் இதர செலவுகளுக்காக, மாதம் 70 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்