மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால் 2ம் திருமணம்! நிச்சயதார்த்த புகைப்படங்கள்

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா ஆகியோரின் நிச்சயதார்த்தம் முடிந்தது.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமான விஷ்ணு விஷால், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற வித்தியாசமான கதைக்களம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்ககூடியவர்.

தன்னுடைய முதல் மனைவியை பிரிந்த விஷ்ணு விஷாலுக்கு, பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து வந்தார்.

இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானாலும், திருமணம் குறித்து இருவரும் வாய்திறக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இன்று (செப் 7) ஜுவாலா கட்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு, நிச்சயம் செய்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், பிறந்தநாள் வாழ்த்துக்கள், இன்று வாழ்வின் புதிய தொடக்கம்.

நமக்கு, ஆர்யனுக்கு, குடும்ப நண்பர்களுக்கு, மக்களுக்காக உழைப்போம், உங்கள் அனைவரின் ஆசி வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்