வடிவேல் பாலாஜி உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உற்று பார்த்து கொண்டிருந்த மகள்! மனதை நொறுக்கிய ஒற்றை புகைப்படம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

வடிவேல் பாலாஜி உடலை உற்று பார்த்தபடி எழுந்திருங்க டாடி என அவர் மகள் கதறியது காண்போர் கண்களை குளமாக்கியது.

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரின் மறைவு சக நடிகர், நடிகைகளையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வடிவேல் பாலாஜிக்கு பள்ளிக்கூடம் செல்லும் வயதில் மகள் மற்றும் மகன் உள்ளனர். அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது, அப்போது குடும்பத்தார் அழுதனர்.

அதிலும் குறிப்பாக அவரது மகள் வடிவேல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியை உற்று பார்த்தபடி இருந்தார்.

பின்னர் அதை தட்டி எந்திரிங்க டாடி என்றும் கண்ண திறங்க டாடி என கத்தி அப்பாவை எழுப்ப முயன்றார். இதை பார்த்த பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

இளமையில் வறுமை கொடியது என்ற ஒளவையின் மொழிக்கு ஏற்ப மனைவி மற்றும் பள்ளி செல்லும் மகன், மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கடக்க வேண்டிய வடிவேல் பாலாஜி, சிகிச்சைக்கு பணமின்றி இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்