வடிவேல் பாலாஜி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி! குடும்பத்தாரிடம் அளித்த நிதியுதவி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

வடிவேல் பாலாஜி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி குடும்பத்தாரிடம் நிதியுதவி அளித்துள்ளார்.

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜிக்கு 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் பக்கவாதமும் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

இதனிடையில் வடிவேல் பாலாஜியின் இரண்டு பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்று கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை சேத்துப்பட்டில் வைக்கப்பட்டுள்ள வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதோடு அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் அளித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்