வடிவேல் பாலாஜிக்கு ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பை மறைத்தனர்! நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார்.. நடிகர் ஆதவன் அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

நடிகர் வடிவேல் பாலாஜிக்கு ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பை மறைத்த மருத்துவமனை நிர்வாகம் அவரை நள்ளிரவில் டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றியது என்ற அதிர்ச்சி தகவலை நடிகர் ஆதவன் வெளியிட்டுள்ளார்.

தனது நகைச்சுவை திறமையால் பல பேரை சிரிக்க வைத்த நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உயிரிழந்தார்.

வடிவேல் பாலாஜி நிதி நெருக்கடியில் இருந்தார் என பல நடிகர்கள் தெரிவித்தனர்.

ஆனால் வடிவேல் பாலாஜியின் தாயார், வடிவேல் பாலாஜிக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை 20 லட்சம் ரூபாய் வரை பறித்துக் கொண்டு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் அவர் மரணம் தொடர்பில் சில அதிர்ச்சி விடயங்களை நடிகரும் தொகுப்பாளருமான ஆதவன் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், அவரது கொடுமையான மரணம் பற்றி வெளியே வராத, தெரியாத சில சம்பவங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வடிவேல் பாலாஜிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதை அவரிடம் தெரிவிக்கவில்லை.

அவரது குடும்பத்தினர் பில்களை செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதால், தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரை நள்ளிரவில் டிஸ்சார்ஜ் செய்து வெளியேற்றியுள்ளது.

வடிவேல் பாலாஜிக்கு இதெல்லாம் ஏன் நடந்தது? காரணம், பணம் கட்ட முடியவில்லை என்பதால் தான். முடிந்தளவுக்கு எல்லோரும் புரட்டிக் கொடுத்தோம். இருந்தாலும் மீதிப் பணத்தைக் கட்ட முடியவில்லை என்பதால் அனுப்பிவிட்டார்கள். அதைச் சொல்லக்கூட இல்லை.

அரசு மருத்துமனையில் அதைக் கண்டுபிடித்தார்கள். 3 நாளுக்கு முன்னால் இப்படி இருந்ததே என்றார்கள். அவருக்குச் சிகிச்சை அளித்திருக்கலாம். வாழ்நாள் முழுக்க இந்த வருத்தம் எனக்கு இருக்கும். இப்படியொரு நிலைமை யாருக்கும் ஏற்படக் கூடாது. எங்களால் இதிலிருந்து மீளவே முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்