வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது! குவிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள்... கண்ணீர் வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார், அவரின் மறைவு திரையுலகினரை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மறைந்த வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிலையில் வடிவேல் பாலாஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது, அவரின் உடல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் மயானத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கண்ணீருடன் கலந்து கொண்டுள்ளனர்.

அதன் நேரலை வீடியோ,

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்