கழுத்தில் பண மாலையுடன் கணவருடன் சிறப்பு பூஜை நடத்திய வனிதா! எதற்கு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமார், கணவர் பீட்டர் பாலுடன் கழுத்தில் பண மாலை அணிந்து வீட்டில் சிறப்பு பூஜை நடத்தியுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார், சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளது. ஆனால் பீட்டர் பால் விவாகரத்து செய்யாமல் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாக கூறி பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில், பீட்டர் பால் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து பீட்டர் பால் வீடு திரும்பி இருக்கும் நிலையில், வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் வனிதா.

இரண்டு மகள்களுடன் வனிதா, பீட்டர் பால் இருவரும் கழுத்தில் பண மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

தனது லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020-ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்