சோதனைக்காக எடுக்கப்பட்ட சிறுநீரில் தண்ணீரை கலந்து கொடுத்த தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை! தவறை மறைக்க செய்த பகீர் செயல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
691Shares

போதை பொருட்களை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி திவேதியிடம் சோதனைக்காக எடுக்கப்பட்ட சிறுநீரில் அவர் தண்ணீரைக் கலந்து கொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் வெளியான அரியான், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படத்தில் நடித்தவர் ராகிணி திவேதி.

இவர் கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முதலில் போதைப் பொருள் விவகாரத்தில் ரவி சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், கன்னட நடிகை ராகினி திவேதி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கடந்த 4ஆம் திகதி அவரை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நடிகை சஞ்சனா கல்ரானியும் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் விவகாரத்தில் ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி உள்ளிட்ட ஏழு பேரை இதுவரையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதில், ராகினி திவேதி போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளரா என்பதை சோதனை செய்வதற்காக பெங்களூருவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறை வட்டாரம், ராகினி திவேதியிடம் சிறுநீர் மாதிரி பெறப்பட்டது. அவர் கொடுத்த சிறுநீர் மாதிரியில் தண்ணீர் சேர்க்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதனையடுத்து, அவரிடம் மீண்டும் சிறுநீர் மாதிரி பெறப்பட்டது. ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ரானி ஆகியோரிடம் தலைமுடி சோதனை செய்யப்படவுள்ளது. அவர்களுடைய தலைமுடி ஹைதராபாத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் மூலம், கடைசி ஐந்து மாதங்களில் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை கண்டறியமுடியும் என கூறியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்