எஸ்பிபி உடல்நிலை குறித்து மகன் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.பி.சரண் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா பாதிப்பிலிருந்து எஸ்பிபி குணமடைந்தாலும் நுரையீரல் உள்ளிட்ட ஒருசில பாதிப்பு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தொடர்ந்து தகவலளித்து வருகிறார்.

இன்று செப்டம்பர் 16ம் திகதி எஸ்பிபி சரண் தந்தையின் உடல்நலம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டதாவது, தந்தை எஸ்பிபி சீராக இருக்கிறார், அவருக்கு தொடர்ந்து பிசியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகள் தொடர்ந்து இயங்குகின்றன, மருத்துவர்கள் குழு மற்றும் அவருக்காக பிரார்த்தனை செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி என சரண் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்