திருமணமான ஓராண்டிலேயே விவாகரத்து! மறுமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் சின்னத்திரை நடிகர்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் சாய் சக்தி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழ் சீரியல்களில் நடித்தும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் பிரபலமானவர் சாய் சக்தி.

பின்னர் நடிப்பு வாய்ப்பு குறைந்ததால் துபாய்க்கு சென்ற அவர் மீண்டும் சென்னை திரும்பினார்.

இதையடுத்து பெற்றோர் பார்த்து சாய் சக்திக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.

ஆனால் திருமண வாழ்க்கையில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படாத நிலையில் ஓராண்டிலேயே மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் சாய்சக்திக்கும் ஃபத்துல் ஃபாத்திமா என்ற பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

எளிமையான முறையில் நடந்த இந்தத் திருமணத்தில் சாய் சக்தியின் நண்பர்களான சில டிவி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்