பிரபல நடிகை கல்யாணியை விவாகரத்து செய்தது ஏன்? முதன் முறையாக காரணத்தை கூறிய கணவர்

Report Print Santhan in பொழுதுபோக்கு
3496Shares

பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் சூர்யா கிரண், மனைவியை விவாகரத்து செய்தது ஏன் என்பது குறித்து முதன் முறையாக கூறியுள்ளார்.

திரைப்பிரபலங்கள் வாழ்க்கையில் பலரும், திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளிலே விவாகரத்து செய்து விடுகின்றனர்.

சில திரைப்பிரபலங்கள் மட்டுமே, ஒன்றாக சொல்லிக் கொள்ளும் படி தங்கள் இல்லற வாழ்க்கையை அழகாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், சூர்யா கிரண் என்பவர் கலந்து கொண்டார். இவர் முதல் வாரத்திலே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் சூர்யா கிரண் நடித்துள்ளார். இவர் பாண்டியன் ஸ்டோர் நடிகை சுஜிதாவின் சகோதரர் ஆவார்.

இவர், கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை கல்யாணியை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

அதன் பின் இந்த தம்பதி விவகாரத்து செய்து கொண்டனர். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது பிக்பாஸை விட்டு வெளியில் வந்துள்ள சூர்யா கிரண் அளித்துள்ள பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் வெற்றிகளையே பார்த்த பிறகு தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டை ஜப்தி செய்தார்கள்.

காரை எடுத்துக்கிட்டார்கள், நடிகை கல்யாணியை பிரிந்ததற்கு காரணமும் கூட அதுதான். அப்போது எனக்கு விபத்தும் நேர்ந்தது. எல்லாம் கெட்ட நேரமும் ஒன்றாக வந்தது, பிரிந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்