பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை

Report Print Mohan Elango in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி.பீ சரண் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் அவசர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி.பீ உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனையில் தரப்பில் தெரிவிக்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக எஸ்.பி.பாலசுப்ரமணியமின் உடல்நிலை தொய்வடைந்துள்ளதாகவும், தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்